fbpx
Homeதலையங்கம்சரியான வேட்டை!

சரியான வேட்டை!

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதும் அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் 8 இடங்கள், புதுக்கோட்டையில் 32 இடங்கள், திருச்சிராப்பள்ளியில் 4 இடங்கள், மதுரை, காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடம், கோயம்புத்தூர், செங்கல்பட்டில் தலா 2 இடங்கள் என்று மொத்தம் 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடை பெற்றது.

வீடு மற்றும் அலுவலகம், மதர் தெரசா கல்வி நிறுவனங்களை சேர்ந்த 10 இடங்கள், மதர் தெரசா கல்வி அறக்கட்டளை அலுவலகம், திருவேங்கை வாசல், முத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கல்குவாரிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் இல்லங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர், ஆதரவாளர்கள் பாண்டிச்செல்வன், குருமன்னார் ஆகியோரின் வீடுகள் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஒட்டுமொத்தமாக ரொக்கமாக 23,85,700 ரூபாய், தங்கம் 4870 கிராம், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ், 19 கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஒரே நேரத்தில் 50 இடங்களில் சோதனை நடத்தியதில் வருவாய்க்கு அதிகமாக ரூ.27.22 கோடி சொத்துக்கள் குவிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img