தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் ராமச்சந்திரன், துணை தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



