fbpx
Homeபிற செய்திகள்கோவை விஜிஎம் மருத்துவமனையில் உயரிய நிலை இரைப்பை மாஸ்டர் ஹெல்த் செக் அறிமுகம்

கோவை விஜிஎம் மருத்துவமனையில் உயரிய நிலை இரைப்பை மாஸ்டர் ஹெல்த் செக் அறிமுகம்

கோவை திருச்சி ரோட்டில் உள்ள வி. ஜி.எம் .மருத்துவமனையில் உயரிய நிலை இரைப்பை மாஸ்டர் ஹெல்த்செக் அறிமுகப்படுத்தியுள்ளோம் என அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் பிரசாத் இன்று (ஆக.26) தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஜீரணக்கோளாறு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று, கோவையில் வி.ஜி.எம். மருத்துவமனையில் ஜீரணக்கோளாறு (காஸ்ட்ரோபெரிசிஸ்) விழிப்புணர்வு மாதம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து உயர்நிலை ஜீரண நல பரிசோதனை மையம் மற்றும் உயர்நிலை காஸ்ட்ரோ மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை தொடங்கப்படுகிறது.
இது ஆரம்பநிலையில் கண்டறியபட்டால், நோயாளிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக இரப்பை மாஸ்டர் ஹெல்த் செக்- இரண்டு ஆண்டுகளுக்கு முன் வி.ஜி.எம்.மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினோம்.
தற்போது உயரியநிலை இரைப்பை மாஸ்டர் ஹெல்த் செக் அறிமுகப்படுத் தியுள்ளோம்.

இதன்மூலம் இரைப்பை ஹெல்த் அறிய முடியும். இந்த புதிய மையம் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img