தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கான சிறப்பு முகாம், உணவு வணிகர்களுக்கான கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பாலக்கோடு அறிவுத்திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமை தாங்கினார். உணவு பாது காப்பு அலுவலர் நந்தகோபால் வர வேற்றுப் பேசினார். அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உணவ கங்கள், தேனீர் கடைகள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்.
இந்த உணவு பாதுகாப்பு உரிமத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட கடைகளில் பொது மக்கள் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும்.
இதேபோன்று உரிமத்தை புதுப்பிக்க தவறியவர்கள் உடனடியாக அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிமம் பெற வேண்டும். உணவுப் பொருட்களை தரமாக தயாரித்து அதனை பார்சல் செய்து அதில் லேபிள் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.
அதில் உணவுப் பொருள் தயாரிக்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு துறை யின் உரிமையின் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
உணவகங்கள் பேக்கரிகள் இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் துரித உணவகங்கள் ஆகியவற்றில் ஓரிரு முறைக்கு மேல் சமையல் எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.
உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண் டும். கடைகளில் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வணிகர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் புகையிலை பொருட் கள் விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை கொடுத்தனர். அவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மனிதர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



