fbpx
Homeபிற செய்திகள்கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற வெள்ளி விழா

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற வெள்ளி விழா

கோவை பத்திரிகையாளர் மன்றம் (CPC) கடந்த 1996 ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் 25வது ஆண்டை நிறைவடைவதை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டுவருகிறது.

கடந்த வாரம் தனியார் கல்லூரியில் பத்திரிகையாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பத்திரிகையாளர்களின் புகைபட கண்காட்சி பந்தைய சாலை யில் நடைபெற்றது.

இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த புகைபட கலை ஞர்களின் புகைபடங்கள் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்தது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரம்,மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்களை மாவட்ட ஆட்சியர் புகைபடம் எடுத்தார்.

இந்த நிகழ்வில் முத்தூஸ் மருத்துவமனை இயக்குனர் முத்துசரவணவேல் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இயக்குனர் பரஸ்ராம் ஆகியோர் பங்கேற்றனர்.

மருத்துவமனை இயக்குனர் முத்துசரவணவேல். இந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img