தருமபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேலம் காரியப்பட்டி ஏபிஎஸ் தாவரவியல் மூலிகை ஆராய்ச்சி மைய கூடத்தில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாவரவியல் மூலிகை ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று ஆராய்ச்சி மையத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க தாவரவியல் மூலிகைச் செடிகளில் விவரங்கள் குறித்தும் அதன் மருத்துவப் பலன்கள் குறித்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டது.
சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சுமார் 75 மாணவ மாணவிகளுக்கு தாவரவியல் மூலிகை ஆராய்ச்சி மையத்தில் அதற்கான ஆராய்ச்சி பயிற்சி நற்சான்றிதழ்களை சிறப்பு சித்த மருத்துவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கி பாராட்டினார்.
இதில் முனைவர் பொன்னம்பலம், கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா, துணைப் பேராசிரியர் கலையரசி, மக்கள் தொடர்பு அலுவ லர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியாக கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு நன்றி கூறினார். பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு மருத்துவர் பாலசுப்பிர மணியம் நன்றி தெரிவித்தார்.



