fbpx
Homeதலையங்கம்இந்தியுடன் ஆங்கிலத்திலும் பயிற்சி

இந்தியுடன் ஆங்கிலத்திலும் பயிற்சி

ரயில்வே மருத்துவமனை நிர்வாகத் தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் நடந்து வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் இந்தியில் மட்டுமே நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு 21ம் தேதி முதல் நடந்து வந்தது.

இதற்கு மதுரை எம்.பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க நிர்வாகத் தரப்பில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 21 ஆம் தேதி முதல் நடந்த பாடங்களையும், ஆங்கிலத்தில் நடத்த திட்டமிடப்பட்டு நவம்பர் 2 வரையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

காலையில் இந்தி பேசுபவர்களுக்கும், மாலையில் இந்தி பேசாதவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை பாராட்டுகிறோம்.

படிக்க வேண்டும்

spot_img