தமிழக யூத் ஹாஸ்டல் சார்பில் ஊட்டி யூத் ஹாஸ்டலில் பவள விழா நிகழ்ச்சிகள் கடந்த நான்கு நாட்களாக தேசிய துணை தலைவர் நான்சியாங் தலைமையில் நடைபெற்றன. துவக்க விழாவில் மாநில சேர்மன் வெங்கட்நாராயணன் வரவேற்றார். தலைவர்கள் கேரளா அபூபக்கர், தெலுங்கானா வெங்கட் யாதவ், பாண்டிச்சேரி எழிலன், தமிழகம் பஞ்சாபகேஷன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் ராஜா வாழ்த்துரை வழங்கினனர்.
மாநில பொருளாளர் ஜீவானந்தம் யூத் ஹாஸ்டல் சார்பில் கேரளா மாநில யூத் ஹாஸ்டல் தலைவர் சைனிடம் ரூபாய் 25,000 வயநாடு மேம்பாட்டிற்காக அளித் தார். ஈரோடு கொங்கு கிளை இந்த வருட பவள விழா ஆண்டில் 59 நிகழ்வுகள் அரசு பள்ளிகளில் கொண்டாடியது. அதன் நினைவாக மலர் விழா நிகழ்வில் வெளியிட்டது.
மலரை தேசிய துணை தலைவர் நான்சியாங் வெளியிட்டார. சேர்மன் வெங்கட்நாராயணன் மற்றும் செயலர் விவேகானந்தன் பெற்றுக் கொண் டனர். நிறைவாக மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா நன்றியுரை ஆற்றினார்.