fbpx
Homeபிற செய்திகள்ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கைலாக்

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கைலாக்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அதன் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கார் மூலம் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தத்தை அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் தேர்வை பிரதிபலிக்கும் வகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கார் கைலாக் என்று அழைக்கப்படவுள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் டைரக்டர், பீட்டர் ஜனேபா இந்த பெயர் வெளியீட்டு விழாவின் போது பேசுகையில், “எங்கள் புதிய எஸ்யுவியான கைலாக் நமது இந்திய மக்களுக்கான ஒரு காராகும். ‘நேம் யுவர் ஸ்கோடா’ என்கிற முன்முயற்சியினை மேற்கொண்டு, அதில் இந்திய மக்களால் 2,00,000க்கும் மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டன. இதிலிருந்து கைலாக் என்கிற பெயர் பெறப்பட்டது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img