Homeபிற செய்திகள்யங் இந்தியன்ஸ் யுவா - கோவை டைஸ் அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

யங் இந்தியன்ஸ் யுவா – கோவை டைஸ் அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

யங் இந்தியன்ஸ் யுவா, மற்றும் கோவை டைஸ் அமைப்புகளுக்கிடையேயான புரிந் துணர்வு ஒப்பந்தம் இன்று கோவையில் உள்ள இந்திய தொழில் கூட் டமைப்பு அரங்கில் நடைபெற்றது.

இன்றைய இளைய சமுதாய மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், மாணவர்க ளிடையே விளையாட்டு துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் தீயவழியில் தங்களது கவனங்களை சிதறாமல் இருப்பதற்கு தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளுதல், கிராமப்புற விளை யாட்டுகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்து இடப்பட்டது.

கோவை டைஸ் அமைப்பின் செயலாளரும் யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன், கோவை டைஸ் அமைப்பின் தலைவர் நித்தியானந்தம், மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பில் தலைவர் விஷ்ணு பிரபாகர், யுவா அமைப்பின் தலைவர் விஷ்ணு பி ஜி, ஆகியோர் தலைமையில் ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது

முனைவர் சம்பத்குமார், இயக்குனர் விளையாட்டுத்துறை, கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பேசுகையில் வளர்ந்து வரும் நாடுகளில் விளையாட்டுத்துறை மற்றும் விளை யாட்டு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

மார்ச் 1 தேதி தொடங்கும் கோவை டைஸ் விளையாட்டுப் போட்டிக்கு யங் இந்தியன்ஸ் அமைப்பு முழு ஒத்துழைப்பை நல்கும் என அதன் செயலாளர் தெரிவித்தார்.
இறுதியாக எங்கு இந்தியன்ஸ் அமைப்பின் நீல் கிக்கானி துணைத் தலைவர் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

படிக்க வேண்டும்

spot_img