Homeபிற செய்திகள்கோவையில் அஸ்வதா டிவிஎஸ் புதிய ஷோரூம் திறப்பு: ஒரே நாளில் 200 வாகனங்கள் டெலிவரி

கோவையில் அஸ்வதா டிவிஎஸ் புதிய ஷோரூம் திறப்பு: ஒரே நாளில் 200 வாகனங்கள் டெலிவரி

கோவை திருச்சி சாலை, சுங்கம் பகுதியில் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையம் திறக்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜு வி.பி., தலைமையில் நடந்த விழாவில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் ஷோரூமை திறந்து வைத்தார். டிவிஎஸ் விற்பனைப் பிராந்திய மேலாளர் அபராஜித் சடகோபன் சேவை மையத்தை திறந்து வைத்தார்.


10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இங்கு, விற்பனை, பழுதுபார்ப்பு, உதிரிபாகங்கள் விற்பனை வசதிகள் உள்ளன. ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விநியோகிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வினீத், ஸ்ரீனிவாசன், மதன், விக்னேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கோவை, கரூர் மாவட்டங்களில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img