fbpx
Homeபிற செய்திகள்பார்க் கல்வி குழும கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலை. துணைவேந்தர் பங்கேற்பு

பார்க் கல்வி குழும கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலை. துணைவேந்தர் பங்கேற்பு

கோவை கணியூர் மற்றும் கரு மத்தம்பட்டியில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமத்தின் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கருமத்தம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 35வது பட்டமளிப்பு விழா மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் 22 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. டாக்டர் ஆர்வேல்ராஜ் (துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொறியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

899 இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மிக பிரமாண்டமான விழாவில் பெற்றுக்கொண்டனர். பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் முதுகலை ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் மோனிஷா பல்கலைக்கழக அள \வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தங்கப்பதக்கத்தை துணை வேந்தர் வேல்ராஜிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மேலும் மூன்று இளங்கலை பொறியியல் பட்டதாரிகள் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.வி.ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

பொதுமேலாளர் சதிஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். அவர் பேசுகையில், இந்த கல்வியாண்டில் இந்த குழு மத்தின் இரண்டு பொறியியல் கல்லூரிகளும் NAAC தரச்சான்று அதிக மதிப்பெண்ணுடன் பெற்றுள்ளதாகவும். பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை முன்னாள் மாணவர்கள் 6 பேர் சந்திரயான் திட்டத்தில் பணி செய்ததாகவும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தனது உரையில், இந்தியர்களின் சராசரி வயது 28 என்றும் மற்ற நாடுகளில் 45 க்கும் மேல் என்றும், இந்த மனித வள ஆற்றலை உலகமே பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இப்போது வெளிவரும் பட்டதாரிகளுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் கூறினார்.


2014 யில் 400 புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் அரசும் இந்திய அரசும் தற்போது ஏற்படுத்தியுள்ள கால சூழ்நிலைக்கு உகந்தவாறு இப் பொழுது ஒரு லட்சத்திற்கும் மேலாக உற்பத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்கபடுவதாகவும் தெரிவித்தார்.

தங்களது துறைகளில், நிறுவ னங்களில் வெற்றி பெற அறிவும், திறமையும் மட்டும் இருந்தால் போதுமானது அல்ல, தகுந்த அணுகுமுறையும் வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்று செயற்கை நுண்ணறிவு மூலமாக பல துறைகள் முன்னேறி வருவதாகவும் ஆயிரம் பேர் சேர்ந்து உருவாக்கிய செயலியை ஒருவர் பயன்படுத்தி இறுதி தயாரிப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

பொறியாளர்களின் பங்களிப்பு எல்லா துறைகளிலும் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தத் தேவைகளை புரிந்து இந்த கல்லூரி நிறுவனம் தனித்துவமான பல பொறியியல் படிப்புகளை வழங்குவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இறுதியாக பொறியாளர் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆசீ பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து பட்டதாரிகள் அனை வருக்கும் சான்றிதழ் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img