Homeபிற செய்திகள்கோவையில் 2 நாளில் 2.09 லட்சம் தேவையற்ற கலன்கள் அகற்றம்

கோவையில் 2 நாளில் 2.09 லட்சம் தேவையற்ற கலன்கள் அகற்றம்

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் கடந்த 2 நாட்களில் 2,09,647 தேவையற்ற கலன்கள் அகற்றப்பட்டன. ழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க அதிரடி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மண்டலத்தில் மட்டும் 3,000 டயர்கள் அகற்றப்பட்டன.


ஆணையாளர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, 100 வார்டுகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் அகற்றப்பட்ட பொருட்களை ஆணையாளர் ஆய்வு செய்தார்.
மேலும், 33-வது வார்டு பி&டி காலனியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள் நதியா, கல்யாணி, நாகராணி, வீரமணி, ரத்தினம், வடுகரசி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கோலப்போட்டி, உறுதிமொழி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img