பேங்க் ஆஃப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் ஊழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வங்கியின் கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரபள்ளி கிளை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அறநெறி சார்ந்த நிர்வாகம், செயல்பாட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.



