இன்று உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியை பசுமை நிறைந்த வளாகமாக மாற்றும் நோக்குடன் இரண்டாம் ஆண்டில் இன்று (வியாழக்கிழமை)பள்ளியின் சேர்மன் குமார் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு பசுமை வளர்ப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு, நீர் வளம் போன்றவற்றைப் பாதுகாப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ராதிகா, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



