தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஆகியோர் தாய்மார்களுக்கு தாய்ப்பால் மகத்துவம் குறித்தும் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் இளம் வயது திருமணத்தை தடுப்பதும் போன்ற அறிவுரைகள் வழங்கினர்.
இதில் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹேமா,
காரிமங்கலம் மருத்துவ அலுவலர் பாலவெங்கடேசன், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது