fbpx
Homeபிற செய்திகள்கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு: ஈரோடு மாவட்டத்தில் 112 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியில்...

கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு: ஈரோடு மாவட்டத்தில் 112 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக் கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடந்தது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 90.07 சதவீதம் வாக்குப்பதிவானது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம், கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வருகிற மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் மே 4-ம் தேதி நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் நுண் பார்வையாளர், மேற் பார்வையாளர், உதவியாளர்களுக் கான பணி ஒதுக்கீடு, கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது தேர்தல் ஆணைய இணையதளத் தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் கணினி சுழற்சியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் என 6 சட்டசபை தொகுதிகளுக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியிலும், கோபி பவானிசாகர் தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது அன்று காலை 7 மணிக்கு தபால் ஓட்டுகள் எடுத்து வந்து பிரித்து எண்ணும் பணியும், 8 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும் ஒவ் வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பார்வையாளர், தலா 17 உதவியாளர், தலா 17 நுண் பார்வையாளர் என 408 அலுவலர் கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

8 சட்டசபை தொகுதிகளில் 2379 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டு பதிவு எந்திரங்கள் ஒரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் 112 மேஜைகளில் நடைபெறும் தபால் ஓட்டு எண்ணும் பணியில் 56 மேற்பார்வையாளர், 112 உதவியாளர், 56 நுண் பார்வையாளர் ஈடுபட உள்ளனர் தபால் ஓட்டு என்னும் பணி 48 மேஜைகளில் நடக்க உள்ளது.

இவர்களுக்கும் கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப் பட்டது கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தகுமார் ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்பித் ஜெயின் கோபி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம் ஈரோடு மேற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துஜா கணினி நிரலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img