fbpx
Homeபிற செய்திகள்கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. அதில் தலைவராக மருது பாண்டியன், உதவி தலைவராக கீர்த்தி வாசன், செயலாளராக கௌதமன், பொருளாளராக அர்ஜுனன் ஆகியோர்கடும் போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோன்று நிர்வாகக்குழு உறுப்பினராக ஐஸ்வர்யா, ஆனந்த் பாபு, ஹர்ஷவர்த்தன், ராஜா, சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் அனைவரும் நேற்று மாலை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்பதவி ஏற்று கொண்டனர். அப்போது அவர்களை பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன் உள்பட வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img