வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டம் வாக்கு எண்ணிக்கை செயல்முறை சீராகவும், குற்றமற்ற முறையிலும் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்றது இதில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.



