fbpx
Homeபிற செய்திகள்இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி  ஆப்ரிக்கா நாடுகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான    அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இதனை பயனாளிகளுக்கு பொருத்துவதற்கான இரண்டாம் கட்ட முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில்  நாராயண் சேவா  சன்ஸ்தான் அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குனர் பகவான் பிரசாத் கவுர், மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா, சமூக ஆர்வலர் கமல் கிஷோர்,  ஹரி பிரசாத் லட்டா  ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“கோவையில் முதன்முறையாக 638க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாராயண்  லிம்ப் அணிவித்து மாற்றுத்திறனாளகளுக்கு புதிய  வாழ்வு அளிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்படவுள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img