fbpx
Homeபிற செய்திகள்பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 30 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, கௌரவித்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் 2025ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப்போட்டி, படம் பார்த்து கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள் எழுதும் போட்டி, வினாடி வினாப் போட்டி, தமிழ்ப் புதினம், கவிதை வாசித்தல் போட்டி, இலக்கியங்கள் அடிப்படையிலான கதை சொல்லும் போட்டி ஆகிய போட்டிகள் அரசுப் பணியாளர்களிடையே நடத்தப்பட்டது.


மேலும், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களிடையே கவிதைப் போட்டி, கட்டு ரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.


இப்போட்டிகளில் கலந்து கொண்டு, வெற் றிப் பெற்ற அரசுப் பணி யாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 30 நபர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாளை முன் னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா இறுதிநாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பாராட் டுச் சான்றிதழ்களை வழ ங்கி, கௌரவித்தார்.


இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராய ணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் வசந்தகுமாரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img