fbpx
Homeபிற செய்திகள்கல்வி நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது: ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

கல்வி நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது: ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

கல்வி நாட்டின் ஜனநாய கத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

மக்கள் சிந்தனைப் பேரவை யின் சார்பில் வேளாளர் பொறி யியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு தலைமை வகித்து த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:


தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணியில் உள்ளது. முழுமை யாகக் கல்விபெற்ற மாநிலமாக தமிழ்நாடு மேலும் உயர்வதற்கு அனைத்து தரப்பினரும் அனை த்து வகைகளிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி பெறாத தமிழர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அக்கல்வி பெயர் அளவுக்கானதாக அல்லா மல் தரம் மிக்கதாக விளங்க வேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி என்ற நிலை உருவாக வேண்டும்.

சுய சிந்தனையையும், சமூக அக்கறையையும் உருவாக்கும் கல்வி முறை இன்றைய காலத்துக்கு தேவையாக உள்ளது. ஜனநாயகம் என்பது மனிதப் பண்புகளில் மேலானது. கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வெரு குடிமகனும் தனித் தனியாகவும், ஒன்று கூடியும் சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளனர்.

கல்வி வளர்ந்தால் அனைத்து வகைகளிலும் நாடு வளரும். மக்களிடையே பண்பட்ட, பக்குவப்பட்ட அணுகுமுறை மேம்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கல்விச் சேவகர் பாபர் அலி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர், அறங்காவலர் எம்.யுவராஜா, வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் எம்.ஜெய ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img