fbpx
Homeபிற செய்திகள்டெக் சேலஞ்ச் 2026 வெற்றியாளர்கள் அறிவிப்பு: கோவை கல்லூரிகள் அசத்தல்

டெக் சேலஞ்ச் 2026 வெற்றியாளர்கள் அறிவிப்பு: கோவை கல்லூரிகள் அசத்தல்

கேட்டர்பில்லர் இந்தியா சார்பில் நடத்தப் பட்ட ‘டெக் சேலஞ்ச் 2026’ பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று சென்னை, திருவள்ளூர் மற்றும் பெங்களூ ருவில் நடைபெற்றது.போட்டியில், செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் விஷன், டிஜிட்டல் இன்ஜினிய ரிங், மென்பொருள் மற்றும் தானியக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழில்துறை சவால்களுக்கு மாணவர்கள் தீர்வுகளை உருவாக்கினர்.


வெற்றியாளர்கள் பட்டியலில் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சிமிஜி), பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பண்ணாரி அம்மன் இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடி மெட்ராஸ், எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, அமிர்தா விஸ்வ வித்யாபீடம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்தன.
இளம் பொறியாளர்களுக்கு நிஜ உலக தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கி, எதிர்கால தொழில்நுட்பத் திறமைகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடத்தப்படுவதாக கேட்டர்பில்லர் இந்தியா மேலாளர் புவன் ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img