கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (விஷிவிணி) உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர் பான விழிப்புணர்வு கருத்தரங்கம், கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த தொழில் முனைவோர் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, சிஐஏ (சிமிகி) அமைப்பின் தலைவர் தேவகுமார், எப்.ஐ.இ.ஓ. (திமிணிளி) துணை இயக்குநர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏற்றுமதி பதிவு, அரசின் அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் நடைமுறை, உதிரிபாகங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான பணப் பரிவர்த்தனை, வெளி நாட்டு சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்க மளித்தனர்.
மேலும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவ னங்கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதன் மூலம் கோவையின் தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன் னேற்றமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. தொழில் முனைவோர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்த துடன், அடுத்த தலைமுறை எம்.எஸ்.எம்.இ.
நிறுவனங்களை உருவாக்க பல் வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



