அகில இந்திய கனரா வங்கி இதர பிற்படுத்தப்பட் டோர் ஊழியர் நலச் சங்கத்தின் (AICBOBCEWA) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, பொதுச் செயலாளராக இ.ஸ்ரீராம் மற்றும் தலைவ ராக சுனில் யாதவ் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாகிகளை அகில இந்திய கனரா வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத்தின் நிறுவனர் ஜி.வி.மணிமாறன், தலைவர் சங்கர், கோவை பிராந்திய செயலாளர்கள் வினோத் குமார், விஷால் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இருந்து உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, கனரா வங்கியில் உள்ள ஓபிசி (OBC) ஊழியர்களின் நலன் மற்றும் அதிகாரமளிப்புக்கான சங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



