செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், மேலக்கோட்டையூர் வி.ஐ.டி பல்கலைகழகத்தில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்மு கம், கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, திருப்போரூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சத்யாசேகர். மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



