fbpx
Homeபிற செய்திகள்கரூர் குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் பரணி பார்க் பள்ளி சாம்பியன்

கரூர் குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் பரணி பார்க் பள்ளி சாம்பியன்

கரூர் குறுவட்ட தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங் கனைகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி யர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கல்விக் குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தனர்.

செஸ், இறகுப்பந்து, வாலிபால், கைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து, சிலம்பம் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமான முதலிடங்களைப் பெற்று அசத் தினர்.
தடகளப் போட்டியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் தொடர்ந்து நான்காவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவிகள் பிரிவில் மூன்றாவது முறையாக இரண்டாமிடம் பிடித்தனர்.
19 வயதுக்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் கிஷோர், 110 மீட்டர் தடையோட்டம், 400 மீட்டர் தடையோட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று 15 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தாட்சாயினி, 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்று 15 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img