fbpx
Homeபிற செய்திகள்கோவை கேபிஆர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் பங்கேற்பு

கோவை கேபிஆர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் பங்கேற்பு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடிகர் முனைவர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வி உதவித் தொகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் நினைவாற்றலை அதிகரித்தல், கவனச் சிதறலை குறைத்தல், உடல் நலத்தை பேணுதல் பற்றி தனது வாழ்க்கை சம்பவங்களோடு இணைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும் பெற்றோர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே.பி. ராமசாமி பேசுகையில், படித்து சாதிப்பவர்களுக்கே அனைத்து இடங்களிலும் அதிகாரமும் முக்கியத்துவமும் கிடைக்குமென கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

விழாவில் கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன், நடப்பாண்டில் 1100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கும் 17 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கும் ரூ.13 கோடி உதவித் தொகை வழங்கியதாக குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 58 கோடி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img