தாய்லாந்தின் பட்டாயா நகரில் ஜூலை 28 முதல் 31 வரை நடைபெற்ற 18-வது எஸ்.ஜி.ஏ.டி.எப் சர்வதேச சாம்பியன்ஷிப்–2026 போட்டி நடைபெற்றது. இதில்
வடவள்ளியைச் சேர்ந்த வருண் முத்துராஜ், ஒற்றைக்கம்பு மற்றும் கம்புச் சண்டை பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். அவரது சகோதரரும், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் தருண் முத்துராஜ், கம்புச் சண்டையில் தங்கப் பதக்கமும், சுருள்வாள் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
கோவையைச் சேர்ந்த இரு சகோதரர்கள் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது பாராட்டை பெற்றுள்ளது.



