fbpx
Homeபிற செய்திகள்கண்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

கண்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் கோவையில் பணியிடத்தில் பார்வையைப் பாது காப்பது குறித்த விழிப்பு ணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

உலக பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு க்கான கருப்பொருளாக “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியு ங்கள்” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்“ சார்பில் கோவையில் “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் இன்று நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் மதுசூதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது. பணி யிடத்தில் பார்வை யைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண் களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது.

இதுகுறித்து ஆப்டோ மெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ப்ரீதா ராம்பிரசாத் கூறுகையில், “பொதுமக்கள் மத்தியில் கண்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கண் பார்வை சரியாக இருந்ததால் தான் நம்மால் ஒரு வேலையை திறம்பட செய்ய முடியும். பணிபுரியும் இடத்தில் பணியாளர்களின் கண்களை பராமரிக்கும் விஷயங்களை நிறுவனங்களின் முதலாளிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வப்போது கண் பரிசோதனைகளை நடத்திட வேண்டும்.” என்றார்.

இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள் அருள், குமரன், சமூவேல் விஜய், சாமுவேல் மற்றும் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img