கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி சேலம் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. மண்டல அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேச்சு போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் கோவை மண்டலத்தில்சட்டக் கல்லூரி மாணவி சினேகா இரண்டாம் இடத்தை பெற்றுரொக்கப் பரிசு 25 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பாகத்தையும் வென்றார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு திமுக சட்டத்துறை மாநிலச் செயலாளர் இளங்கோ எம்.பி பரிசு தொகையும் பழக்கமும் வழங்கினார்.
திமுக சட்டத்துறை மாநில இணை செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், வழக்கறிஞர் பழனிசாமி, சட்டக் கல்லூரி மாணவர் ஷேக் உற்பட பலர் உள்ளனர்.