fbpx
Homeபிற செய்திகள்தரவரிசை பட்டியலில், தேசிய அளவில் கலசலிங்கம் பல்கலைக்கு 29ம் இடம்

தரவரிசை பட்டியலில், தேசிய அளவில் கலசலிங்கம் பல்கலைக்கு 29ம் இடம்

தேசிய அளவில் பல்கலைகழகங் களுக்கான தரவரிசை பட்டியலில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைகழகம் 29ம் இடம் பிடித் துள்ளது.

ஒன்றிய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் பல்கலைகழகங்களுக்கான 2023ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தேசிய அளவிலான இந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29ம் இடம் பிடித்துள்ளது.

மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவின் அனைத்து பொறியியல் நிறுவனங்களுக்கு இடையில் பொறியியல் பிரிவில் 36ம் இடத்தையும், தேசியஅளவில் அனைத்து பிரிவுகளிலும் 48ம் இடத்தையும் கலசலிங்கம் பல் லைக்கழகம் பிடித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் எஸ்.சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் டீன்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களையும் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img