fbpx
Homeபிற செய்திகள்கரூர் ஜமாபந்தியில் 191 பயனாளிகளுக்கு 89.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்- மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்...

கரூர் ஜமாபந்தியில் 191 பயனாளிகளுக்கு 89.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்- மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்

கரூர் மாவட்டம் புகலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1432 ஆம் ஆண்டு பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் விவசாயிகள் குடிகள் மாநாடு (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆறாம் தேதி துவங்கி நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் 345 மனுக்கள் அளித்துள்ளனர். இதில் 218 மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 127 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் பேரிடர் மேலாண்மை துறை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா,மின்னணு குடும்ப அட்டை,வீடு கட்ட கடன் உதவி, விவசாயிகளுக்கு தார்பாய்கள், பண்ணை கருவிகள், விசைத்தெளிப்பான் என மொத்தம் 191-பயனாளிகளுக்கு ரூபாய் 89.15-லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டபாணி, பொது மேலா ளர் பிரபு, வாணிப கழக மாவட்ட மேலா ளர் சண்முக வடிவேல், புகலூர் நகராட்சி தலைவர் சேகர், வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img