fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக. சார்பில் கழக நிறுவனதலைவர் மறைந்த விஜயகாந்த் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் வி.தயாளலிங்கம் தலைமையில் தூத்துக்குடி மாநகர பகுதி அண்ணாநகர் 12ல் காலை 10 மணி அளவில் தலைவர் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் அலெக்ஸாண்டர் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் வல்லரசு துரை, மாலதி நாராயண மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜபொம்மு, பொதுக்குழு உறுப்பினர் செல்வம். ஜெயசிங், பகுதி கழக செயலாளர்கள் சுரேஷ், நாராயணமூர்த்தி, ராஜா முகமது, அரசமுத்து, ஸ்மார்ட் சுரேஷ், மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ரகுமான் பாட்ஷா, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, பால்ராஜ். முருகன், வட்ட கழக செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள் சுப்பு, மாரிமுத்து, ஆறுமுகம், தமிழ்செல்வன், ராமச்சந்திரன், மாரியப்பன், நாகசாமி, இருளப்பசாமி, கிருஷ்ணசாமி, ஆனந்தகிருஷ்ணன், பாலகணேஷ், கார்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img