விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலையில் சுமார் 1000 பேர் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியை ஈரோடு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் எஸ்.எம்.சாதிக் ஈரோடு மரப்பாலம் பகுதியில் நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் தொல் திருமாவளவனின் 62 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவம் பதித்த 62 வெள்ளி காசுகளை சாதிக், அவருக்கு வழங்கினார். மேலும் 62 நபர்களுக்கு ஆட்டோ வழங்கும் ஏற்பாட்டின்படி முதல் கட்டமாக 12 நபர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.
முன்னதாக கட்சியின் இலவச சட்ட உதவி மையத்தை தொல் திருமாவளவன் திறந்து வைத் தார். நிகழ்ச்சியில் 1000க்கும் மேற் பட்டவர்கள் விடுதலை சிறுத்தை கள் கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொல் திரு மாவளவன் பேசும்போது பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணையும்போது கட்சி மேலும் வலுப்பெறும். கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும். சமுதாய பணியாற்ற வேண்டும்.
பொது மக்களின் பிரச்சினைகளை கவனத்துடன் கையாண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த எஸ்.எம்.சாதிக் உட்பட கட்சி நிர்வாகிகளை அவர் பாராட்டினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, சிறுத்தை வள்ளுவன், செந்தமிழ் வளவன், திருநாவுக்கரசு, மனோஜ் முத்துசாமி, தமிழரசன், கமலநாதன் தங்கவேலு இனியமுதன், அக்பர்அலி பால்ராஜ், துரைபாலு, சித்திக், ஆனந்தன், எழில், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.