இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான Vi தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களை வெறும் 99 ரூபாய் ரீசார்ஜ் மூலம் தனது வலுவான நெட்வொர்க்கில் சேர அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா முழுவதுக்குமான மலிவான கட்டணத்தில் 99 ரூபாய் தொடக்க நிலை ரீசார்ஜ் திட்டத்தை வழங்கும் ஒரே பிராண்ட் Vi என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதே Vi நெட்வொர்க்கிற்கு மாறுங்கள் என்று பொருள்படும் வகையிலான ‘Switch to Vi’ புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் மொபைல் போன் வாடிக்கையாளர்களை Vi நெட்வொர்க்கில் இணைய அழைக்கிறது Vi.
வெறும் 99 ரூபாய் ரீசார்ஜ் மூலம் 28 நாட்களுக்கு முழு நேர அழைப்புகளுக்கான டாக் டைம் [full talktime] மற்றும் 200 எம்பி டேடாவை அளிக்கிறது.
வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் தமிழ் நாடு மற்றும் கேரளாவுக்கான கிளஸ்டர் பிசினஸ் ஹெட் எஸ். முரளி கூறியதாவது:
Vi நிறுவனத்தில், எப்போதும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, அனைத்து மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மிகச்சரியாக புரிந்துகொள்வதில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தடையில்லாத நெட்வொர்க்
மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் சமாளிக்க, மிக அவசியமான தங்கு தடையில்லாத நெட்வொர்க் இணைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
இந்த தொடக்கநிலை ரீசார்ஜ் பேக் மூலம், அனைவருக்கும் ஏற்ற வகையில் மலிவான, கவர்ச்சிகரமான விலை ரீசார்ஜ் சிறந்த மொபைல் சேவைகளை வழங்குவதே தொடர் முயற்சியாக இருந்தது வருகிறது.
தமிழ்நாட்டில் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும் கூட இப்போது 99 ரூபாயில் Vi நெட்வொர்க்கில் சேரலாம். இதன் மூலம் இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் கனெக்ட்டியின் மூலமான ஏராளமான பலன்களைப் பெற்று பயனடைய முடியும்.
இந்தச் சிறப்பு சலுகையின் மூலம், அனைத்து தரப்பு மக்களும் மொபைல் ஃபோன் பயன்படுத்த உதவுவதோடு, வாடிக்கையாளர்கள் எந்நேரமும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறோம் என்றார்.