fbpx
Homeபிற செய்திகள்உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் குடல் அழற்சி நோய் சிகிச்சை...

உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் குடல் அழற்சி நோய் சிகிச்சை மையம் துவக்கம்

உலக செரிமான சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை விஜிஎம் மருத்துவமனை பிரத்யேக குடல் அழற்சி நோய் சிகிச்சை மையம் “VGM IBD Clinics” ஐ தொடங்கியது.
கோவையில் உள்ள விஜிஎம் மருத்துவமனை, உலக செரிமான சுகாதார தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, விஜிஎம் குடல் அழற்சி நோய் சிகிச்சை மையங்களைத் திறந்து வைத்தது. இந்த சிகிச்சை மையத்தை, பத்ம பூஷண் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி (மூத்த இரைப்பை குடல் நிபுணர்) திறந்து வைத்தார்.

குரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கோலிடிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குடல் அழற்சி நோய், இந்தியாவில் வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகளவில் கண்டறியப்படுகிறது. குறிப்பாக, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம், வயிற்று வலி, காரணமின்றி உடல் எடை குறைதல், இரத்த சோகை அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் நபர்களுக்கு, நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர்.

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த சிகிச்சை மையம், மேம்பட்ட எண்டோஸ்கோபிக் நோயறிதல், உயிரியல் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் சிக்கலான குடல் அழற்சி நோய்களுக்கான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை மேலாண்மை உள்ளிட்ட விரிவான பல்துறை சிகிச்சையை வழங்குகிறது.
இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வி.ஜி.எம் மருத்துவமனை, நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் குடல் அழற்சி நோயை நன்கு புரிந்துகொண்டு நிர்வகிக்க உதவும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட, ‘என் குடல், என் குரல்’ (விஹ் நிut, விஹ் க்ஷிஷீவீநீமீ) என்ற மாதாந்திர நோயாளி ஆதரவு மற்றும் கல்வி மன்றத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், வி.ஜி.எம் குடல் அழற்சி நோய் சிகிச்சை மையங்கள், குடல் அழற்சி நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, ஆதார அடிப்படையிலான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சையையும் வழங்கும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் வம்சி மூர்த்தியின் அறிமுகவுரையுடன் தொடங்கிய அறிவியல் அமர்வில், டாக்டர் மதுரா பிரசாத் சுமன் குடல் அழற்சி நோய் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் குறித்தும், டாக்டர் எஸ். திவ்யசாரதி ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு குறித்தும், மற்றும் குடல் அழற்சி நோய் ஆலோசகர் சுமந்திரன் நோயாளிகளுக்கான உளவியல் ஆதரவு குறித்தும் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியை டாக்டர் மித்ரா பிரசாத் ஒருங்கிணைத்தார், டாக்டர் சி.பி.எஸ். சுமன் நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img