fbpx
Homeபிற செய்திகள்எஸ்ஆர்எம்-ல் இன்று ‘மிலான்’ கலைத்திருவிழா துவக்கம்

எஸ்ஆர்எம்-ல் இன்று ‘மிலான்’ கலைத்திருவிழா துவக்கம்

எஸ்ஆர்எம்-ல் ‘மிலான்’ தேசிய அளவிலான கலைத் திருவிழா இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. செய்தியாளர்கள் கூட்டத்தில் எஸ்ஆர்எம் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது :

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ‘மிலான்’ என்கிற தேசிய அள விலான கலைத்திருவிழா நடத் தப்பட்டு வருகிறது. 15வது ஆண்டாக மிலான் கலைத் திருவிழா தொடர்ந்து 4 நாள் நடைபெறுகிறது.

எஸ்ஆர்எம் நிறுவனம் என் றாலே கல்வி கற்பித்தல் பணி மட்டும் போதாது,
மாணவர்களிடயே உள்ள பல்வேறு வகையிலான அறிவு திறமைகளை வெளியே கொண்டு வருவதுடன் அதனை பல்லாயிரம் மாணவர்கள் ஒருங்கிணைந்து அறிவுதிறமைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

“ஆருஷ்”

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் “ஆருஷ்” என்கிற தொழில்நுட்ப திருவிழா, “மிலான்” என்கிற கலைத்திருவிழா, விளையாட்டு திருவிழா என 3 முக்கியநிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
மிலான் கலைத்திருவிழாவை தெலுங்கு நடிகர் நானி தொடங்கி வைக்கிறார்.

தேசிய அளவில் 150-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை சேர்ந்த 9,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
மாணவ, மாணவியரின் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், அந்தாக்சிரி எனப்படும் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட 150விதமான நிகழ் வுகள் நடைபெறுகின்றன.

மார்ச் 3ம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் இரவு நிகழ்ச்சியில் போர்ச்சுகல் நாட்டின் டீஜே இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி முதன்முதலாக இங்கு நடத்தப்படுகிறது.

மார்ச் 4ம் தேதி இரவு பிரபல சினிமா பின்னணி பாடகர் கார்த்திக் பங்கேற்கும் சினிமா பாடல் இசை நிகழ்ச்சி நடை பெறுகிறது. மார்ச் 5ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் சுந்தீப்சர்மாவின் காமெடி நிகழ்ச்சி நடைபெறுகிறது என் றார்.

படிக்க வேண்டும்

spot_img