கோயம்புத்தூர் பேஸ்கட்பால் அசோசியேஷன் சார்பில் 59-வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, 23-வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் மற்றும் 59வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.
கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற அகில இந்திய கூடைப் பந்து போட்டிகள் கடந்த மே 27-ம் தேதி துவங்கி (நேற்று) மே 31- வரை 5 நாட்கள் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் இந்திய விமானப்படை, புது டெல்லி, இந்திய ராணுவம் – புது டெல்லி, இந்திய கடற்படை – லோணாவாலா, கேரள மாநில மின்சார வாரியம், திருவனந்தபுரம், பேங்க் ஆஃப் பரோடா – பெங்க ளூரு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – சென்னை, கேரள போலீஸ் – திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் அணிகளும் பெண்கள் பிரிவில் சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செக்கந்தராபாத், சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே – ஹுப்ளி, சதர்ன் ரெயில்வே – சென்னை, ஐ.சி.எஃப். – சென்னை, கேரள மாநில மின் சார வாரியம், திருவனந்தபுரம், சென்ட்ரல் ரெயில்வே மும்பை, கேரள போலீஸ், திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகளும் பங்கேற்றன.
இப்போட்டிகள் கடந்த 29-ம் தேதி வரை லீக் முறையிலும், 30-ம் தேதி அரையிறுதி போட்டியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையி றுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கப்பல் படை அணியும் இந்திய ராணுவ அணியும், பெண் கள் பிரிவில் கேரளா மாநில மின் சார வாரிய அணியும் தென் மேற்கு இரயில்வே அணியும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்ற இறுதிப் போட்டியில் விளையா டின. முன்னதாக நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்திய விமானப்டை அணியும் விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 70 – 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
பெண்கள் பிரிவில் தென் மேற்கு ரயில்வே அணியை எதிர்த்து மத்திய ரயில்வே அணி விளை யாடியது. இதில் தென் மேற்கு ரயில்வே அணி 89 – 55 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய இராணுவ அணி 95 & 77 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணி 74 & 67 என்ற புள்ளி கணக்கில் கேரளா மாநில மின்சார வாரிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக மகளிர் பிரிவில் விளையாடிய அணிகள் 64 / 64 என்ற புள்ளி கணக்கில் சம நிலையில் இருந்ததால் போட்டி ஐந்து நிமிடம் நீடிக்கப்பட்டது. இறுதியில் தென் மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய இராணுவ அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த இந்தியா கப்பல் படை அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் மற்றும் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய இந்திய ராணுவ அணியின் வீரர் ராகுல் குமாருக்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தென் மத்திய ரயில்வே அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த கேரள மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும் மேலும் சிறப்பாக விளையாடிய தென் மத்திய ரயில்வே அணியின் வீராங்கனை கே.பி.ஹர்ஷிதாவுக்கு சிறந்த விளை யாட்டு வீராங்கனை என்ற விருது வழங்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவரும், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவரும், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக தமிழக பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரும் அகில இந்திய கூடைப்பந்து கழக தலைவருமான ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு களை வழங்கினார். கௌரவ விருந்தினராக சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் கலந்து கொண்டார். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் எஸ்.பாலாஜி, துணை செயலாளர் எம்.தீபாலா ஆகியோர் செய்து இருந்தார்கள்.



