அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் மாவட்டம் 2505 மற்றும் விஜிஎம் மருத்துவமனை ஆகியவை இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விஜிஎம் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விஜிஎம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர். வி.ஜி.மோகன் பிரசாத் தலைமை தாங்கினார். அலையன்ஸ் பிரபாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் டாக்டர் மோகன் பிரசாத் கேக் வெட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் மதுரா பிரசாத் சுமன், மித்ரா பிரசாத், டாக்டர் வம்சி, டாக்டர் சுமன் ஆகியோர் பல தலைப்புகளில் புற்றுநோய் பற்றி உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் ம.எ.ராமசாமி மருத்துவமனை டாக்டர் மோகன் பிரசாத் மற்றும் மருத்துவர்களை பாராட்டி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்ககள் கலந்து கொண்டனர்.



