சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில், போதைப் பொருட்கள் தவிர்த்தல் விழிப்புணர்வு விளையாட் டுப் போட்டிகள், பரிசளிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தன்னார்வலர் சண்முகப்பிரியன் அனைவரையும் வரவேற்றார்.
மதுக்கரை நகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சமூக ஆர் வலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கவிதா வாழ்த்துரை வழங்கினார்.
போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சந்திர கலா ராணி பேசியதாவது:
இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கக்கூடிய செயலாகும்.
சங்கமித்ரா அறக்கட்டளை போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக எடுத்துள்ள
விழிப்புணர்வு முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்து இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் நிர்வாக செயல் இயக்குனர் தேவி விஜயகுமார் பேசியதாவது: ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் போதைப் பொருட்களுக்கு எதிராக போராடக்கூடிய நிலைக்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு மதுக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பரிசுகள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்துஸ்தான் கல்லூரி மேலாண்மைத் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.



