குறைந்த கதிர்வீச்சு மற்றும் டீப் லேர்னிங் தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட சி.டி. பரிசோதனைகளை அடையாறு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அல்ட்ரா லோ டோஸ் சி.டி. மார்பு பரிசோதனை மற்றும் லோ டோஸ் கரோனரி சி.டி. ஆஞ்சியோகிராபி மூலம் கதிர்வீச்சு மற்றும் கான்ட்ராஸ்ட் மருந்தின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் 133 கரோனரி சி.டி. பரிசோதனைகள், ஒவ்வொன்றுக்கும் சுமார் 15 மி.லி. கான்ட்ராஸ்ட் மருந்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
260 பேருக்கு அல்ட்ரா லோ டோஸ் மார்பு சி.டி. பரிசோதனை செய்யப்பட்டதில், 179 பேருக்கு பயாப்ஸி மேற்கொள்ளப்பட்டு, 54 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.



