சென்னை காவேரி மருத்துவமனை சார்பில் ‘காவேரி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஆழ்வார்பேட்டை, வடபழனி, ரேடியல் சாலை, மா காவேரி பகுதிகளில் 10 பைக் ஆம்புலன்ஸ்கள் செயல்படும். மருத்துவப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இயக்கும் இவற்றில் கிணிஞி, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் வரும் வரை தேவையான முதலுதவி வழங்குவதே இச்சேவையின் நோக்கம்.
நிகழ்ச்சியில் சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் பி.பகலவன், டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



