தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் நெகிழிப் பைகளை அறவே தவிர்க்க வேண்டும் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆனையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர் சரவணக்குமார், உதவி பொறியாளர் சரவணன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



