Homeபிற செய்திகள்‘இக்னிட்ரான் 26’ கே.பி.ஆர். கல்லூரியில் தொழில்நுட்ப விழா

‘இக்னிட்ரான் 26’ கே.பி.ஆர். கல்லூரியில் தொழில்நுட்ப விழா

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான ‘இக்னிட்ரான் ’26’ தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை விழா நடைபெற்றது.
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில், முதல்வர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலையில் விழா நடந்தது.
ஆட்டோராபிட் நிறுவனத்தின் உலகளாவிய மக்கள் செயல்பாடுகள் தலைவர் சங்கீத் ராமகிருஷ்ண மூர்த்தி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் இருந்து சுமார் 2,500 மாணவர்கள் பங்கேற்றனர். 24 மணி நேர ஹேக்கத்தான், தொழில்நுட்பப் போட்டிகள், ஆட்டோ ஷோ, கே.பி.ஆர். ஜப்பான் எக்ஸ்போ, மாதிரி ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு விழாவில் ஹேலியான் குளோபல் கேபபிலிட்டி சென்டரின் குளோபல் ரிவார்ட்ஸ் ஆபரேஷன்ஸ் இயக்குநர் வி.நடராஜபெருமாள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img