தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 57-வது தேசிய நூலக வாரவிழா தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் இரா மாதேஸ்வரன் வர வேற்று பேசினார். இரண் டாம் நிலை நூலகர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தேசிய நூலக வார விழா புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து, கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நூலக அலுவலர்ராஜேந்திரன், வாசகர் வட்டத்துணைத் தலைவர் பொன்முடி, தலைமை ஆசிரியர்கள் பழனி, தமிழ்தாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள், நீட் பயிற்சி மாணவர்கள கலந்து கொண்டனர். முடிவில் மூன்றாம் நிலை நூலகர் அமுதா நன்றி கூறினார்.