fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் - கலெக்டர் ஆய்வு

மாவட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் – கலெக்டர் ஆய்வு

மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. இதை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் 1.1.2015-யை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு கடலூர்மாவட்டத்தில் உள்ள 2,313 வாக்குச்சா வடிமையங்களிலும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் தொடர் பாக சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று 2-வது நாளாக சிறப்பு முகாம்
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிமையத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்தவாக் குச்சாவடி நிலை அலுவலர்களிடம்,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து பெற வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக வாக்காளர்களிடம் படிவங்களை கலெக்டர் பெற்று, அலுவலர்களிடம் வழங்கினார்.

இதை பார்த்த அரசியல் கட்சியினர், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள் ளது. முகவரி மாற்றமும் செய்யவில்லை என்றனர். உடன் இது பற்றி உரிய முறையில் விண்ணப்பங்களை அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்பி றகு கூத்தப்பாக்கம் புனித வளனார் பள்ளி வாக்குச்சாவடிமையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன், தேர்தல் தாசில்தார் சுரேஷ், தி.மு.க. பகுதி செயலாளர் சலீம், துணை செயலாளர் ஜெயசீலன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் மாதவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img