fbpx
Homeபிற செய்திகள்ஜப்பான்- ஜெர்மன் தொழில்நுட்ப செயற்கைக்கால் அளவீட்டு முகாம்

ஜப்பான்- ஜெர்மன் தொழில்நுட்ப செயற்கைக்கால் அளவீட்டு முகாம்

நாராயண் சேவா சனஸ்தான் சார்பில் மாபெரும் இலவச மாற்றுத்திறனாளிகள் திருத்த அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் ஜப்பான் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண தொழில் நுட்ப செயற்கைக்கால் அளவீட்டு முகாம் வரும் மே 24-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர், கோவையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த முகாம் நடைபெறுவதாகவும், முன்னதாக நடைபெற்ற முகாமில் 650-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் செயற்கைக் கால்கள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் பயனடைந்தனர் என்றனர். முதல் முகாமிற்கு கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இரண்டாவது முறையாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. மே 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை சோமையம்பாளையம், கே.என்.ஜி. புதூர் பிரிவு, தடாகம் மெயின் ரோட்டில் உள்ள மகேஷ்வரி பவான் வளாகத்தில் நடைபெறுகிறது.


காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் எனவும், இந்த முகாம் மாத்ரு ஸ்ரீ சாந்தா பென் திரிபுவன்தாஸ் பட்டேல் அறக்கட்ட ளையுடன் இணைந்து நாராயண் சேவா சன்ஸ்தான் நடத்துவதாக தெரிவித்தனர். தொடர்ந்து முகாம் தொடர்பான தகவல் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img