தொழில்முறை அர்ப்பணிப்பும் சமூக சேவையையும் சிறப்பாகப் பாராட்டும் வகையில் கோவை சென்டினியல் ரோட்டரி சங்கம் சார்பில் ஜெம் மருத்துவமனையின் முன்னணி மருத்துவர் ரோட் டேரியன் டாக்டர் ஆனந்த் விஜய்க்கு தொழில்முறை சிறப்புத் திறன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, ரோட்டரி இன் டர்நேஷனல் மாவட்டம் 3206 ன் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் எம் டி செல்லா ராகவேந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வழங் கினார். இந்நிகழ்ச்சிக்கு கோவை சென்டினியல் ரோட்டரி சங்கத் தலை வர் ரோட்டேரியன் பேரா சிரியர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செய லாளர் ரோட்டேரியன் ராகேஷ் மற்றும் தொழில் முறை சேவைத் தலைவர் ரோட்டேரியன் பெயின் இசாவ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மேலும் உதவி ஆளுநர் ரோட் டேரியன் செந்தில் குமார், ஜிஜிஆர் ரோட்டேரியன் ஈஸ்வரன் மாவட்ட இயக்குநர் ரோட்டேரியன் சம்பத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விருதைப் பெற்ற டாக்டர் ஆனந்த் விஜய், பலருக்கு புதிய வாழ்வு கிடைக்க உறுப்பு தானம் குறித்த விழிப் புணர்வை ரோட்டரி அமைப்பு ஏற்படுத்த வேண் டும் என கேட்டுக்கொண் டார்.
ஜெம் மருத்துவமனை யின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவின் ராஜ் இந்த விருதிற்காக டாக்டர் ஆனந்த விஜய் அவர்களை தேர்வு செய்த ரோட்டரி சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.



