fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் நாளை வேத ஆகம தேவார ஆன்மீக மாநாடு: 1100 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் நாளை வேத ஆகம தேவார ஆன்மீக மாநாடு: 1100 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் நாளை (13ம் தேதி) முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு குறித்த தகவலை மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அருணாசலேசுவரர் கோயிலின் இளவரசு பட்டம் மிராசு அர்ச்சகர் பிடி. ரமேஷ் குருக்கள் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த மாநாடு திரு வண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள சந்தைமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் நாளை (13ம் தேதி) காலை 8.45 மணிக்கு, பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், பட்டம் ஹாலஸ்யநாத சிவாச்சாரியார், இளவரசு பட்டம் வெங்கடேச குருக்கள் தலைமையில், 1,008 சிவாச்சாரியர்கள் பங்கேற்கும் சிவபூஜை நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை பழனி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தொகுத்து வழங்க, இளவரசு பட்டம் சோனாத்திரி நன்றி தெரிவிக்கிறார். மாலை ஆன்மீக கலாச்சார ஊர்வலம் நடைபெறுகிறது.

இரவு நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கத் தலைவர் செந்தில்குமார் அடிகளார், ஸ்ரீவில் லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், வேலூர் நாராயணி பீடம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா ஆகியோர் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (14ம் தேதி) காலை, அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 1,008 பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

மேலும், இளவரசு பட்டம் கோகுல் குருக்கள் அருணாசலா தீர்த்தங்கள் நூலை வெளியிடுகிறார். மாநாட்டை சென்னை வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார டிரஸ்ட் ஸ்ரீ ஜெகதீஸ் கடவுள் மற்றும் விழாக்குழுவினர் ஒருங்கிணைத்து நடத்து கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img